தொடர்ந்து 3 நாட்கள் பேருந்துகளில் இலவச பயணம் – மாநில அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

0
தொடர்ந்து 3 நாட்கள் பேருந்துகளில் இலவச பயணம் - மாநில அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!
தொடர்ந்து 3 நாட்கள் பேருந்துகளில் இலவச பயணம் - மாநில அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

டெல்லியில் புதிதாக பயன்பாட்டுக்கு வர உள்ள, 150 புதிய எலக்ட்ரிக் பஸ்களில், இன்று முதல் வருகிற மே 26ம் தேதி வரை பொதுமக்களுக்கு இலவச பயணம் அளிக்கப்படுவதாக, மாநில அரசு அறிவித்துள்ளது.

 மாநில அரசு அறிவிப்பு :

நம் நாட்டின் தலைநகர் டெல்லியில், கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு பிரச்சனை மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. தற்போது, அதற்கான மாற்று வழியை டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதாவது, காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் தலைநகர் டெல்லியில் இன்று முதல் 150 எலக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த எலக்ட்ரிக் பஸ்கள் குறித்த விழிப்புணர்வை, பொது மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக  இன்று முதல் வருகிற 26ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு இலவச பயணம் அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த பஸ்களில் சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ் மற்றும் 10 பேனிக் பட்டன்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்க சிறப்பான நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த சிறப்பு எலக்டிரிக் பஸ் குறித்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here