மாநிலத்தில் முழு ஊரடங்கு குறித்து முதல்வர் புது விளக்கம் – அரசின் நிலைப்பாடு இதுதான் என திட்டவட்டம்!!

0

மக்கள் முகக் கவசம், அணிவதை உறுதிப்படுத்தினால் நாங்கள் லாக்டவுன் போடுவதைப் பற்றி யோசிக்க மாட்டோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

முதல்வர் அறிவிப்பு :

கடந்த ஜனவரி 4 ஆம் தேதி, உத்தரகாண்ட் மாநிலத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவர் தன்னை 8 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டார். அதன் பிறகு நேற்று, மீண்டும் அவர் மக்கள் சேவைக்கு திரும்பினார். இந்நிலையில் மாநிலத்தில் பொது முடக்கம் பற்றிய கருத்துக்கு பதில் அளித்த அவர், இனி வரும் நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 22,000 நபர்கள் தொற்றால் டெல்லியில் பாதிப்படைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், 2ம் அலையின் போது ஏற்பட்ட இறப்பை விட தற்போதைய இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேபோல் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை எனவும், நீங்கள் முகக்கவசம் அணிந்தால், நாங்கள் லாக்டவுன் கொண்டு வர மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். பொது முடக்கம் பற்றி இப்போதைக்கு எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பொது முடக்கம் பற்றிய பயம் மக்களை ஆட்கொண்ட நிலையில், டெல்லி முதல்வரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here