#DCvsKKR ஐபிஎல் போட்டி – கொல்கத்தாவை வீழ்த்துமா டெல்லி?

0

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி vs கொல்கத்தா

இன்றைய ஐபிஎல் போட்டியில் இரவு 7.30 மணி அளவில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்தே மிக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது டெல்லி அணி. அந்த அணி அவ்வப்போது சிறிய தவறுகளை செய்தாலும் பின்பு மிக சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியில் தற்போது அஸ்வின் இல்லாதது சற்று பின்னடைவாக இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த அணியில் சுழற்பந்து வீச்சில் பல ஜாம்பவான்கள் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது. எனவே இன்றைய போட்டியில் வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் டெல்லி அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. அதே போல் தொடக்கத்தில் இருந்தே சொதப்பலாக விளையாடிய கொல்கத்தா அணி கடந்த சில போட்டிகளில் பிரமிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

மே 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அதிரடி!!

இது வரை இந்த அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசி போட்டியை போல் இந்த போட்டியிலும் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டால் டெல்லி அணியை மிக எளிதாக வென்று விடும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் 26 முறை மோதியுள்ளன அதில் அதிகபட்சமாக கொல்கத்தா அணி 14 முறையும் டெல்லி அணி 12 முறையும் தனது வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here