ஓய்வு பெறுகிறார் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
ஓய்வு பெறுகிறார் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஓய்வு பெறுகிறார் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் - ரசிகர்கள் அதிர்ச்சி!

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க வேகப்புயல், வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார்.

வேகப்புயல் டேல் ஸ்டெய்ன் :

தென்னாபிரிக்காவின் வேகப்புயல் அதாவது வேகப்பந்து வீச்சாளர் என்று அழைக்கப்படுபவர் டேல் ஸ்டெய்ன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. டெஸ்ட் கிரிக்கெட்டில் 439 விக்கெட்டுகளை கைப்பற்றிய டேல் ஸ்டெய்ன் ஒருநாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளையும் டி20-யில் 64 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காக டிசம்பர் 17,2004-ல் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானவர் இவர் என்பது இந்த இடத்தில் குறிப்பிடத் தகுந்தது.

ஓய்வு பெறுகிறார் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஓய்வு பெறுகிறார் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் – ரசிகர்கள் அதிர்ச்சி!

மேலும், அதிவிரைவில் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியதில் இவரது சாதனை நம்பர் 1 இடத்தில் பார்க்கப்பட்டது. டேல் ஸ்டெய்ன் எல்லா நாடுகளிலும் எல்லா கட்டுப்பாடுகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் , ஓடி வந்து அந்த வேகத்துடன் வீசி பந்தை ஸ்விங் செய்யும் அழகை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது என்பது ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

ஓய்வு பெறுகிறார் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஓய்வு பெறுகிறார் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இதையடுத்து தனது விருப்ப ஓய்வை டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார். இதோடு சேர்த்து அவர் மேலும் தெரிவித்ததாவது, பயிற்சிகள், மேட்ச்கள், பயணங்கள், வெற்றிகள், தோல்விகள், மகிழ்ச்சி, சகோதரத்துவம், ஆகியவை அடங்கிய 20 ஆண்டுகால கிரிக்கெட்டில் ஏகப்பட்ட நினைவுகள் நடந்துள்ளன. என் வாழ்வில் நான் காதலித்த கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனது வாழ்வில் துணை நின்ற ரசிகர்களுக்கும், என்னுடன் பயணித்த என் சக நண்பர்களுக்கும், ஊடகத்துறை தோழர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என உருக்கமாக பேசியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here