சன் டிவியில் முக்கிய சீரியலில் ஒப்பந்தமான தெய்வமகள் காயத்ரி – அப்போ இனி ஒரே ரகளை தான்!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த திருமகள் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷமிதா விலகியதை அடுத்து முக்கிய பிரபலம் ஒருவர் நடிக்க உள்ளார்.

திருமகள்

சன் டிவியில் தற்போது திருமகள் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது பிறக்கும் போது குழந்தையை மாற்றி வைத்ததால் ஏற்பட்ட பிரச்சனைகள் தான் இவை அனைத்திற்கும் காரணம் ஐஸ்வர்யாவின் அண்ணன் தான்.

சொந்த தங்கைக்கே இந்த அளவிற்கு துரோகம் செய்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா தான் தன் மகள் என்று தெரியாமல் அவரை பழி வாங்க வேண்டும் என்று அழைத்து கொண்டுள்ளார்.

மேலும் இந்த சீரியல் இதுவரையிலும் இல்லாத விதமாக வித்தியாசமான கான்செப்ட்டில் இந்த சீரியல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் டிவியில் மௌன ராகம் சீரியலில் காதம்பரியாக நடிக்கும் ஷமிதா தான் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

சில காரணங்களுக்காக அவர் இந்த சீரியலில் இருந்து விலக தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தெய்வமகள் புகழ் காயத்ரி நடிக்கவுள்ளார். மீண்டும் காயத்ரியா என பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here