Friday, April 26, 2024

உலகின் எந்த சக்தியாலும், இந்திய பிரதேசத்தின் ஒரு அங்குலத்தை கூட தொட இயலாது – ராஜ்நாத் சிங் ஆவேசம்..!!

Must Read

லடாக் பகுதிக்கு வருகைப் புரிந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய மற்றும் சீனா இடையிலான பேர்ச்சுவார்த்தையின் விளைவு எவ்வாறாக இருக்கும் என உத்தரவாதம் கொடுக்க இயலாது என்றும், ஆனால் உலகின் எந்த சக்தியாலும், இந்திய பிரதேசத்தின் ஒரு அங்குலத்தை கூட தொட இயலாது என்றும் கூறியுள்ளார்.

ராஜ்நாத் சிங்கின் உரை:

மேலும் சீனாவின் அத்துமீறலின் போது இந்திய இறையாண்மையைக் காக்க கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் துறந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்திய ராணுவ வீரர்கள் நாட்டின் எல்லையை மட்டும் பாதுகாக்கவில்லை, 130 கோடி மக்களின் மரியாதையை பாதுகாக்கிறார்கள் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார்.

India-China border tensions | Defence Minister Rajnath Singh ...

தனக்கு என்ன நிகழ்ந்தாலும் அதனை தாங்கி, தங்களது சுயமரியாதைக்கு ஏதும் நிகழக் கூடாது என எண்ணும் சுயமரியாதை பெற்றவர்கள் நமது வீரர்கள் என்றும், எவராவது நமது எல்லையில் நுழைய எண்ணினால், அது நடக்காது எனவும் கூறியுள்ளார்.

இந்தியா சீனா பேச்சுவார்த்தையின் விளைவு:

அவ்வருகையில், அமைச்சர் பாரா கைவிடுதல், பிக்கா மெஷின் துப்பாக்கி, இந்திய ராணுவ T-90 தொட்டிகள், BMP இன்பான்ட்ரி காம்பாட் வண்டிகளின் வேலைகள் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்தியா மற்றும் சீனா ராணுவ மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும், இருதரப்பும் பரஸ்பர பணிவிலகளை தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

india china ladakh problem
india china ladakh problem

15 மணி நேர பேச்சுவார்த்தையில், இருதரப்பும் முழு பணிவிலகளுக்கு உறுதியளித்துள்ளதாகவும் மற்றும் அச்செயல்முறை சிக்கலானது எனவும், அவற்றிற்கு நிலையான சரிபார்ப்பு வேண்டும் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -