பிறந்தநாள் அன்று வெளியாக இருந்த பட ட்ரைலரை தள்ளி வைத்த தீபிகா படுகோண் – என்ன காரணம் தெரியுமா?

0
எனக்கு அவர கல்யாணம் பண்ணவே பிடிக்கல.. எக்குத்தப்பாக பேசி சர்ச்சையில் சிக்கிய தீபிகா படுகோண்!

தீபிகா படுகோண் தனது பிறந்த நாள் அன்று அவரது பட ட்ரைலரை மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பரவலின் காரணமாக ட்ரைலர் வெளியீட்டை தள்ளி வைத்து தனது கணவருடன் மாலத்தீவுக்கு பிறந்தநாளை கொண்டாட சென்றுள்ளார்.

தீபிகா படுகோண்:

பாலிவுட்டின் முன்னணி நாயகியான தீபிகா படுகோண் இன்று (ஜனவரி 5,2022) அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவர் தற்போது நடித்த கெஹ்ரையன் திரைப்படத்தின் ட்ரைலர் இவரின் பிறந்த நாள் விழாவில் வெளியிடுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. கெஹ்ரையன் திரைப்படத்தில் தீபிகா படுகோனேயுடன் இணைந்து அனன்யா பாண்டே, சித்தார்த் சதுர்வேடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் கெஹ்ரையன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவை தீபிகா தற்போது தள்ளி வைத்துள்ளார். ட்ரைலர் வெளியிட்டு விழாவை கேன்சல் செய்த கையோடு தனது பிறந்தநாளை மாலத்தீவில் தனது கணவரான ரன்வீர் சிங்குடன் கொண்டாட சென்றுள்ளார். தற்போது இத்திரைப்படத்தின் ட்ரைலர் அடுத்து எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here