ஆர்யா பட வெற்றியை பரிசளித்து கொண்டாடிய தயாரிப்பாளர் – சந்தோஷத்தில் மூழ்கி போன இயக்குனர்!!!

0

நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி படம் வெற்றி அடைந்ததை அடுத்து அந்த படத்தின் இயக்குனருக்கு அதன் தயாரிப்பாளர் கார் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார்.

கார் வழங்கி கெளரவம்:

நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ஓடிடியில் வெளியான படம் டெடி. இயக்குனர் சக்தி சவுந்தரராஜனுக்கு இயக்கத்தில் உருவான இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.  இசையமைப்பாளர் டி. இமான் இசையில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது.

டெடி பொம்மை பேசுவது போன்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் உருவான இந்த கதையின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இந்த படத்தின் இயக்குனர் சக்தி சவுந்தரராஜனுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.  அதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here