நகை பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்… தங்கத்தின் விலை குறைந்தது!!!

0

தங்க நகைகள் விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதனாலேயே தங்க நகைகளுக்கு  மவுசு அதிகமாகி  வருகிறது. எனவே அதன் விலையும் நிலையற்ற ஒன்றாகவே இருக்கிறது. அதன் அடிப்படையில்  இன்று தங்கம் சவரனுக்கு ரூ.496 குறைந்து உள்ளது.

தங்க நகைகள் என்றாலே பெண்கள் மத்தியில் மிகுந்த  ஆர்வத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்துவது. எவ்வளவு நகைகள் இருப்பினும் இன்னும் அதை சேர்ப்பதிலும் அணிவதிலையும் ஆர்வம் காட்டுவார்கள். பெண்கள் இப்படி என்றால் ஆண்கள் அதை தங்களது முதலீடாகவும், கஷ்டத்திற்கு உதவும் பொருள்களாகவும் பார்க்கின்றனர். எனவே இந்த தங்க நகைகள் அதிக மவுசுகள் உடன் இருக்கிறது.

இந்நிலையில் தங்கத்தின் விலையானது ஏறுமுகமாகவும் இறங்கு முகமாகவும்   உள்ளது. கொரோனா காலகட்டத்தில் அதன் விலை உச்சத்தை அடைந்த நிலையில் அதன் பின் சிறிது குறைந்தது அதன் பின் மெல்ல மெல்ல ஏறியும் இறங்கியுமாக வருகிறது. இதனையடுத்து இன்று சென்னையில் ஆபரணத்  தங்கத்தின்  விலையானது சவரனுக்கு ரூ.496 குறைந்து ஒரு சவரன் தங்க நகை ரூ.36,120க்கும், ஒரு கிராம் ரூ.4,515க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பு நகை பிரியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here