மக்களே ஹாப்பி நியூஸ்.., LPG சிலிண்டர் விலை இந்த மாசம் “இவ்வளவு” குறைஞ்சிடுச்சா??

0
மக்களே ஹாப்பி நியூஸ்.., LPG சிலிண்டர் விலை இந்த மாசம் "இவ்வளவு" குறைஞ்சிடுச்சா??

இந்தியாவில் விநியோகிக்கப்படும் வணிக பயன்பாடு மற்றும் வீட்டு உபயோகம் சிலிண்டர்களின் விலையை ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. இந்நிலையில் சில மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து குறைவதும், வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

indane gas cylinder booking

மேலும் சிலிண்டர்களின் விலையை குறைக்க வேண்டும் என இல்லத்தரசிகள் போராட்டங்களையும் நடத்த வருகின்றனர். இந்நிலையில் இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால் எண்ணெய் நிறுவனங்கள், சமையல் சிலிண்டர் விலையில் மாற்றத்தை அறிவித்துள்ளது. அதாவது வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் தற்போது 25.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு.,, தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

இதன் அடிப்படையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2,045 இருந்து ரூ.2,009.50 ஆக குறைந்துள்ளது. ஆனால் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ. 1,859க்கு விற்பனை ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here