‘ஊரடங்கிற்கு பின் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது’ – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!!

0
தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் - மீறினால் ரூ. 500 அபராதம்! சுகாதாரத்துறை செயலர் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் - மீறினால் ரூ. 500 அபராதம்! சுகாதாரத்துறை செயலர் அதிரடி உத்தரவு!!

கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா தொற்று தமிழகத்தில் பரவி வந்தது. தமிழக அரசின் அறிவிப்பின்படி கடந்த 10 ம் தேதி முதல் 24 ம் தேதி வரையிலான முழு ஊரடங்கின்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ள்ளது.

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு:

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமாகி வருகிறது. முதல் அலையை கடந்து இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றன. பரவி வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் கதர்போது கடந்த 10ம் தேதி நுதல் வருகிற 24ம் தேதி வரை  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமல்படுத்தகப்பட்ட பின்பு கொரோனா பரவும் விகிதம் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்நிலையில், பெரம்பூரில் அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் அரசு புறநகர் மருத்துவமனையில் புதிய கொரோனா அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரண்டாம் அலையில் அறிகுறிகளை கண்டதும் இளைஞர்கள் பரிசோதனையை மேற்கொள்வது நோய் தொற்றின் பரவலை தடுக்க உதவியாக உள்ளது எனவும், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை எனவும் செய்தியாளரிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here