கடும் உணவு பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் இலங்கை – அவசரநிலை பிரகடனம்!!

0
கடும் உணவு பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் இலங்கை - அவசரநிலை பிரகடனம்!!
கடும் உணவு பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் இலங்கை - அவசரநிலை பிரகடனம்!!

தனியார் வங்கிகளில் அன்னியச் செலாவணியின் கையிருப்பு குறைந்ததால் இலங்கையில் உணவு பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு அவசரநிலையானது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அவசர நிலை:

உலகநாடுகள் அனைத்தும் கொரோனாவின் பிடியிலிருந்து தற்போது தான் மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இலங்கையில் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இரும்புத்திரை நாடாக இருந்த வடகொரியாவில் இதேபோல் நிலைமை நிலவியது. அங்கு மக்கள் உணவு பொருட்கள் இல்லாமல் தவித்தது வந்தனர்.

கடும் உணவு பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் இலங்கை - அவசரநிலை பிரகடனம்!!
கடும் உணவு பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் இலங்கை – அவசரநிலை பிரகடனம்!!

வடகொரியாவில் 2 நாட்களுக்கு ஒருமுறை தான் மக்கள் சாப்பிட்டதாகவும், மேலும் அங்கு 1 கிலோ வாழைப்பழமானது ரூ.3500 க்கு விற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதே நிலையானது இலங்கையில் தற்போது நிலவி வருகிறது. அங்கு பொருளாதார நிலையானது பாதிக்கப்பட்டுள்ளதால் உணவுப்பொருட்களின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் இலங்கையில் தனியார் வங்கிகளில் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்ததாகும்.

கடும் உணவு பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் இலங்கை - அவசரநிலை பிரகடனம்!!
கடும் உணவு பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் இலங்கை – அவசரநிலை பிரகடனம்!!

மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களான சர்க்கரை, அரிசி, வெங்காயம், காய்கறிகள் மற்றும் இதர உணவு பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே உணவு பொருட்களின் விலையானது அதிகரித்துள்ளது. இலங்கையின் அதிபரான கோத்தபய ராஜபக்சே அங்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் அவர் அவசர கால விதிமுறைகளையும் அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here