டிச.8 (நாளை) ‘பாரத் பந்த்’ – மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

0

மத்திய அரசு வெளியிட்ட 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கூறி “டெல்லி சலோ” என்ற பெயரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிடுவதாக இல்லை.இது தொடர்பாக விவசாயிகள் “பாரத் பந்த்” எனப்படும் முழு கடை அடைப்பிற்கு அழைப்புவிட்டிருந்தனர். இது குறித்து மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

“பாரத் பந்த்” 

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கூறி விவசாயிகள் டெல்லி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போராட்டம் நடத்திவருகின்றன. 12 நாட்களாக நடைபெறும் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அரசு 3 சட்டங்களையும் வாபஸ் பெற வாய்ப்பில்லை எனவும் சில திருத்தங்களை செய்யலாம் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் சட்டங்களை திரும்பப்பெறுவதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது தொடர்பாக 5 கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்த நிலையில் 6-ம் கட்ட பேச்சு வார்த்தை வருகிற 9-ம் தேதி நடக்கவுள்ளது. ஆனால் வருகிற 8-ம் தேதி நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். பாரத் பந்த் போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, டிஆர்எஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நிலவில் கொடி நாட்டிய சீனாவின் ‘ஆர்பிட்டர் ரிட்டனர்!!

இந்த நிலையில் நாளை நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு மத்திய அரசு சில மாநில அரசுகளுக்கு கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. அதில், சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனவும், கொரோனா விதிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் கடைகளை அடைக்க கட்டாயப்படுத்தினால் போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here