மாலத்தீவில் ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்த டிடி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!!

0
சின்ன திரை தொகுப்பாளினி டிடி மாலத்தீவுகளில் கடலில் ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த வீடியோவிற்கு ‘உங்களுக்கு ஒரு பேர்பெக்ட் ஆன பெண் தேவைப்பட்டால், அது நான் அல்ல..’ என்று தலைப்பிட்டுள்ளார். இதற்கு கிண்டலான கமெண்டுகளை இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணிபுரிபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. தற்போது இவரை அவ்வளோவாக சின்னத்திரையில் காண முடியாவிட்டாலும் இவர் இடத்தை யாராலும் மிக எளிதில் நிரப்ப முடியாது. இவர் சின்னத்திரை தாண்டி வெள்ளிதிரையிலும் விசில், பவர் பாண்டி, சர்வம் தாள மையம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
டிடி சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். தற்போது அங்கு எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவிற்கு ‘உங்களுக்கு ஒரு பேர்பெக்ட் ஆன பெண் தேவைப்பட்டால், அது நான் அல்ல..’ என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் 3 வருஷத்துக்கு முன்னாடி போட வேண்டிய கேப்ஷனை இப்போ போடுறீங்க என்று கலாய்த்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here