பிரபல நடிகர்களுடன் இருக்கும் டிடியின் முன்னாள் கணவர் – வைரலாகும் புகைப்படம்!!

0

தொகுப்பாளினி திவ்யா தர்ஷினியின் கணவர் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் உள்ள ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக நிகழ்ச்சிகளை தொகுத்து வருபவர் தான் திவ்யதர்ஷினி. இவர் தனது இயல்பான பேச்சின் மூலமாக தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டார். இப்படியாக இருக்க, இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தந்து நெருங்கிய நண்பரும் உதவி இயக்குனருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருச்சியில் சட்டமன்ற தேர்தல் நிறுத்தமா?? தேர்தல் அதிகாரி விளக்கம்!!

இதனை அடுத்து இருவரும் நன்றாக தான் இருந்தனர். ஆனால், சில காரணங்களால் இருவரும் மனம் ஒத்து விவாகரத்து பெற்று கொண்டனர். இது குறித்து ஸ்ரீகாந்த் ஒரு முறை பேட்டியில் கூறினார். அதாவது, டிடி திருமணம் முடிந்த பின்பும் கூட தனது ஆண் நபர்களுடன் இரவு நேர பார்ட்டிக்கு செல்வது என்று இருந்து வந்தாராம். இதனை ஸ்ரீகாந்த் மற்றும் அவரது வீட்டினர் கண்டித்துள்ளனர்.

கிரிக்கெட் போட்டிகள்

இதன் காரணமாகவே இருவரும் பிரிந்து விட்டதாக அவர் கூறினார். ஆனால், டிடி இது குறித்து இன்று வரை எந்த வித பேட்டியும் கொடுக்கவில்லை. இப்படியாக இருக்க டிடியின் கணவர் தனது நண்பர்களுடன் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த புகைப்படத்தினை இசை அமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார். டிடியின் கணவர் நடிகர்கள் கலையரசன், சாந்தனு உள்ளிட்டோர் இருக்கின்றனர். அதே போல் அந்த புகைப்படத்தில் பாடகர் விஜய் ஏசுதாஸும் உள்ளார். இசை அமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தினை வெளியிட்டு அனைவரும் கிரிக்கெட் விளையாட தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here