15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி….,94 ரன்கள் விளாசி லிவிங்ஸ்டன் அபாரம்….,

0
15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி....,94 ரன்கள் விளாசி லிவிங்ஸ்டன் அபாரம்....,
15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி....,94 ரன்கள் விளாசி லிவிங்ஸ்டன் அபாரம்....,

இன்று நடைபெற்று முடிவடைந்துள்ள IPL 2023 போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலாவதாக பவுலிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் (46), ப்ரித்வி ஷா (54), ரிலே (82) மற்றும் சால்ட் (26) ஆகியோரது அருமையான பங்களிப்பு மூலம் 20 ஓவர் முடிவில் 213 ரன்கள் எடுத்தது. இப்போது, 214 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் சிங் (22), அதர்வா (55), லியாம் லிவிங்ஸ்டன் (94) ஆகியோர் அதிரடி காட்டினர்.

இதுலயும் நாங்க ஃபர்ஸ்ட் தான்…..,விதிமீறல் புகார்களில் தோனி முதலிடம்….,

இருந்தாலும், பஞ்சாப் அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த வகையில், இந்த ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 10 ஆவது இடத்தில் இருந்து 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here