#DCvsRR போட்டியில் வெளியேறிய 5 முக்கிய வீரர்கள் – விளையாடப்போகும் அணி விவரம் இதோ!!

0
RRvsDC
RRvsDC

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் 5 முக்கிய வீரர்கள் களமிறங்க மாட்டார்கள் என்றும் விளையாடப்போகும் அணியின் வீரர்கள் பட்டியல் பற்றிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

டெல்லி vs ராஜஸ்தான்:

14வது ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்றிரவு மும்பை மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் தற்போது பல்வேறு பிரச்சனைகள் சந்தித்து வருகிறது. டெல்லி அணியில் ஏற்கனவே ஷ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்நிலையில் அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் மூன்று பேர் அணியில் பங்கேற்பது சிக்கலாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

RRvsDC
RRvsDC

அந்த வகையில் டெல்லி அணியில் இருந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக தற்போது அக்சர் படேல், நோற்கியா மற்றும் ரபாடா இந்த போட்டியில் பங்கேற்கமாட்டார்கள். அதேபோல் ராஜஸ்தான் அணியில் முக்கிய வீரரான ஆர்ச்சர் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் இடம் பிடிக்கமாட்டார்கள். காரணம் ஆர்சேர் இன்னும் உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை, அதேசமயம் ஸ்டோக்ஸ் காயத்தினால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அணியில் விளையாடப்போகும் வீரர்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

டெல்லி உத்தேச அணி விவரம்:

ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ரிஷாப் பாண்ட்(C)(WC), ஸ்டோனிஸ், ஹெட்மேயர், வோக்ஸ், அஸ்வின், டாம் கரண், அமித் மிஸ்ரா, அவீஸ் கான்.

ராஜஸ்தான் உத்தேச அணி விவரம்:

பட்லர், வோஹ்ரா, சஞ்சு சாம்சன்(C)(WC), லிவிங்ஸ்டோன், துபே, ரியான் பராக், மோரிஸ், தேவாட்டியா, சேகன் சக்கரியா, முஸ்தபிசுர் ரஹ்மான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here