‘வணக்கம் டா மாப்ள.., ஆஸ்திரேலியால இருந்து’ – டேவிட் வார்னரின் இந்திய அன்பில் ரசிகர்கள் உருக்கம்!!

0

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வார்னரின் புகைப்படத்திற்கு கருத்து தெரிவித்திருந்த ரசிகருக்கு வார்னர் அன்பு பாசத்தோடு ரிப்ளை செய்துள்ளார். அந்த ரிப்ளைவை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியா வீரர்:

கிரிக்கெட் என்றால் நம் நாட்டு மக்களுக்கு தனி பிரியம் தான். நம் நாட்டு வீரர்கள் மேல் மட்டும் மக்களுக்கு விருப்பம் இருக்காது. பிற நாட்டு அணியினை சேர்ந்த வீரர்கள் நன்றாக விளையாடினால் அவர்களுக்கு என்று இந்தியாவில் ரசிகர் பட்டாளம் உருவாகிவிடும். அப்படி சமீப காலமாக அனைவர்க்கும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றால் அது டேவிட் வார்னர் தான். ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பொது முடக்கத்தின் போது தெலுங்கு பாடலான “புட்டபொம்மா” மற்றும் பாகுபலி படத்தின் காட்சியினை வைத்து வீடியோ வெளியிட்டார். தனது குடும்பத்தினருடன் இருப்பது போல் இருக்கும் அந்த வீடியோ மூலமாக இந்திய ரசிகர்களுக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. தற்போது நடந்த ஐபிஎல் போட்டியில் ஹைதெராபாத் அணிக்கு கேப்டனாகவும் இருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப் போவது யார்??

ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒரு நாள் போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. இப்படியான நிலையில், டிக்டாக்கில் ஒருவர் “வணக்கம் டா மாப்ள..!! என்று பேசுவார். அவரை போலவே டேவிட் வார்னர் உள்ளார் என்ற கருத்து இருந்து வந்தது. அவரை போலவே இருக்கும் ஒருவர் வரைந்த புகைப்படத்தை வார்னர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்திற்கு ஒரு ரசிகர் “வார்னர் அண்ணா..என்றும் இந்தியர் தான்..” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ரிப்ளை செய்த வார்னர் “இந்தியா எனக்கு இரண்டவது வீடு” என்று அன்பு பொங்க கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சந்தோச களிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here