
PM கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் 3 தவணையாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் தற்போது வரை விவசாயிகளுக்கு 14வது தவணை வீதம் ரூ.2000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இம்மாதம் அவர்களது வங்கி கணக்கில் 15 வது தவணைத் தொகை செலுத்தப்பட உள்ளது.

இந்த 15வது தவணைத் தொகை தீபாவளிக்கு முன்னதாகவே விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் பயன்பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் அவர்களது 15வது தவணைத் தொகையான ரூ.2000 இம்மாதம் 15ஆம் தேதி அவர்களது வங்கி கணக்கில் நிச்சயம் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.