திருப்பதி போறீங்களா? இதான் உங்களுக்கு சரியான டைம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
திருப்பதி போறீங்களா? இதான் உங்களுக்கு சரியான டைம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
திருப்பதி போறீங்களா? இதான் உங்களுக்கு சரியான டைம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கோடீஸ்வர கடவுளான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தடை நீங்கியதால் அனுதினமும் பல்வேறு நாடுகளில் இருந்து திருப்பதியில் தரிசனத்திற்கு பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில், நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்வதால் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடிக்கு குறையாமல், தற்போது ரூ. 7 கோடி வரை வசூலாகி வருகிறது. இது மட்டும் இல்லாமல், தற்போது பக்தர்கள் சொர்க்கவாசல் வழி தரிசனம் செய்வதால் ஆன்லைன் டிக்கெட் ரூ.300 க்கு 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்திற்கு 50 ஆயிரம் பக்தர்களும் முன்பதிவு செய்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்பில் இனி Network பிரச்சனைக்கு குட் பை., வெளியான மெட்டாவின் சூப்பர் அப்டேட்!!

ஆனால் திருப்பதி தேவஸ்தானம் எதிர்பார்த்த அளவுக்கு தற்போது பக்தர்கள் கூட்டம் நிலவவில்லை. இதனால் காலை இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் பிற்பகல் 3 மணிக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் ஜனவரி 12 முதல் 31ம் தேதி வரை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன முன்பதிவு https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here