இருட்டு அறையில் பூனைகளுடன் தனது 6 வயது குழந்தை அடைப்பு – தாய் செய்த கொடூர செயல்

0

இருட்டு அறையில் தனது 6 வயது பெண் குழந்தையை 19 பூனைகளுடன் அடைத்து வைத்து பூனைக்கான உணவை மட்டுமே கொடுத்து துன்புறுத்தி இருக்கிறார் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர்.

தற்போது மக்கள் அனைவராலும் பேசப்படும் ஒரு நிகழ்வாக இருந்து வருவது தாய் தனது குழந்தைக்கு செய்த கொடூர செயல்கள். இதனால் மக்கள் கொந்தளித்து வருகிறார்கள். சமீபத்திய நிகழ்வாக இருப்பது விழுப்புரம் அருகே தாய் தனது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கி அதனை வீடியோ பதிவும் செய்ததுதான்.

இதனைப்பற்றி விசாரிக்கும் போது அவருடைய கணவருக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கோவத்தில் அவர் தன் குழந்தையை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.மேலும் குழந்தையை தாக்கியதற்காக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதற்கு காரணமாக இருந்த அவரின் கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவில் இது போன்ற நிகழ்வு நடந்து விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கையில் தற்போது ரஷ்யாவிலும் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இதில் தாய் தனது 6 வயது பெண் குழந்தையை  ஒரு இருட்டு அறையில் 19 பூனைகளுடன் அடைத்து வைத்தது மட்டுமல்லாமல் பூனைக்களுக்கு கொடுக்கும் உணவினை மட்டுமே தந்து கொடுமை படுத்தியுள்ளார். இதனால் இவரை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையில் இவர் 3 வயதுக்கு பின் அவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகத்தான் இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் தந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here