100 கோடி செலவில் நடிகர் தனுஷின் 50 ஆவது படம்…..,கசிந்த தகவல்…,

0
100 கோடி செலவில் நடிகர் தனுஷின் 50 ஆவது படம்.....,கசிந்த தகவல்...,
100 கோடி செலவில் நடிகர் தனுஷின் 50 ஆவது படம்.....,கசிந்த தகவல்...,

தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி தற்போது பாலிவுட், ஹாலிவுட் என தனது திரைப்பயணத்தை கொண்டு சென்றிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது இயக்குனர் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதில் நடிகர் தனுஷுடன் இணைந்து நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர தயாராகும் த்ரிஷா…..,கைவசம் இத்தனை படங்களா?

இந்த படத்தை அடுத்து நடிகர் தனுஷ் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி, தயாரித்து, அதில் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. இது நடிகர் தனுஷின் 50 ஆவது திரைப்படமாகும். இது தவிர, இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here