இணையத்தில் வைரலாகும் ‘ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்’ – உயிரைப் பறிக்கும் அபாயம்..!

0

‘ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்’ எனப்படும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய சேலஞ்ச் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது மிகவும் ஆபத்தான விளையாட்டு என பலரும் எச்சரித்து வருகின்றனர்.

டிக்டாக் வைரல்..!

ஒரு காலத்தில் வேற லெவலில் வைரலான ‘கிகி சேலஞ்ச்’ போன்று தற்போது ‘ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்’ வைரலாகி வருகிறது. இது குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பரவி வருவதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்த சேலஞ்சில் மூன்று பேர் வரிசையாக நிற்பர். முதலில் நடுவில் இருப்பவரைத் தவிர மற்ற இருவரும் குதிப்பர். பின்பு நடுவில் இருப்பவர் குதிக்கும் போது அவ்விருவரும் சேர்ந்து அவரின் காலை தடுக்கி பின்நோக்கி விழ வைப்பர். இதனால் பின் தலை பகுதியில் கடுமையாக காயம் ஏற்படும் அதுமட்டுமில்லாது இது உயிரைப் பறிக்க கூடியது என்பதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு போலீசார் எச்சரித்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here