அஜீத் திரைப்பட நடிகர் மரணம்…, பிறந்தநாளில் இறந்த சோகம்…,

0
அஜீத் திரைப்பட நடிகர் மரணம்..., பிறந்தநாளில் இறந்த சோகம்...,
அஜீத் திரைப்பட நடிகர் மரணம்..., பிறந்தநாளில் இறந்த சோகம்...,

நடிகர் அஜீத் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த டான்ஸர் ரமேஷ் தனது பிறந்தநாளில் உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மரணம்

டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர் டான்ஸர் ரமேஷ். இவர் சென்னை கே.பி.பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், டான்ஸர் ரமேஷ் தான் வசித்து வந்த குடியிருப்பு பகுதியின் 10 ஆவது மாடியில் இருந்து குதித்து திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

குக் வித் கோமாளி அஸ்வினின் அடுத்த அவதாரம்., மனுஷன் உசுர கொடுத்து இப்படி ரெடி ஆகுறாரே!!

நடனக்கலைஞர் ரமேஷ், நடிகர் அஜீத் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், நடிகர் ரமேஷ் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here