கொரோனா தினசரி பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் – கட்டுக்கடங்காமல் வேகமாக பரவும் தொற்று!!!

0

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய தகவலின் படி, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,76,110 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 3,874 ஆக பதிவாகியுள்ளது. மேலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற..கிளிக் செய்யுங்கள்..!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தரவுகளின்படி, இந்தியாவில் மே 19 ஆம் தேதி வரை 32,23,56,187 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 20,55,010 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம்  தொற்றால் ஏற்படும் இறப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை இந்த பெருந்தொற்றுக்கு இந்தியாவில் 2,87,122 பேர் பலியாகியுள்ளனர். இந்நோயில் இருந்து தற்போது வரை 2,23,55,440 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும்  கொரோனவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,69,077 ஆக உள்ளது. மேலும் இது வரை நாடு முழுவதும் 18,70,09,792 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

சென்ற ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையின் தாக்கத்தை விட இரண்டாம் அலையின் தாக்கம் மக்களை மிக மோசமாக பாதித்து வருகிறது. தற்போது சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள், இந்த இரண்டாம் அலையின் தாக்கம் இன்னும் இந்தியாவில் குறையவில்லை என்பதையே மக்களுக்கு உணர்த்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here