
இன்றைய நவீன காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு போன்களின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த ஆண்ட்ராய்டு போன்கள் மூலம், மக்கள் தங்களுக்கு தெரியாதவற்றை எளிதில் தெரிந்து கொள்ளவும், வேண்டியதை உடனுக்குடன் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளவும், பண பணப்பரிவர்த்தனையை மிக எளிதாகவும் என பல வசதிகளை உள்ளடக்கியது. இதனால், பல்வேறு சாதகமான பலன்களை மக்கள் பெற்று வந்தாலும் அதற்கு ஏற்றார் போல சில தீமைகளும் இந்த ஆண்ட்ராய்டு போன்களில் உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த வகையில், ஆண்ட்ராய்டு போன்களை மட்டும் குறி வைத்து தாக்கும் வைரஸ் ஒன்று பரவுவதாக மத்திய அரசு எச்சரிக்கை அளித்துள்ளது. அதாவது, மத்திய அரசின் கீழ் செய்யப்பட்டு வரும் தேசிய சைபர் பாதுகாப்பு முகமை (CERT) ஆண்ட்ராய்டு போன்களில் நம்பகத்தன்மை இல்லாத இணையதளத்தில் இருந்து எந்த ஒரு செயலி மற்றும் அப்லிகேஷன் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அதிரடி உத்தரவு.., மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்!!
அவ்வாறு செய்தால், ‘Daam’ என்ற புதிய வகை வைரஸ் பரவும் என தேசிய சைபர் பாதுகாப்பு முகமை எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. இந்த வகை வைரஸ் ஆனது, ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள டேட்டாக்கள், SMS-கள், போன் கால்ஸ் உள்ளிட்டவற்றை திருடுவது, தானாகவே ஸ்கிரீன் ஷாட்கள் எடுப்பது மற்றும் பாஸ்வேர்ட்களை மாற்றுவது என பல விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என CERT கூறியுள்ளது. இதனால், நம்பகத்தன்மை உள்ள அப்டேட்டான ஆன்டி ஸ்பைவேர் மற்றும் ஆன்டி வைரஸ் போன்ற மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் CERT தெரிவித்துள்ளது.