அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் படி, ஆண்டுக்கு இரு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்துவது வழக்கம். இதன்படி, கடந்த ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு 42%-திலிருந்து 46%-மாக உயர்த்தி அறிவித்தது. இதனை தொடர்ந்து, தமிழ்நாடு, ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகளும் அகவிலைப்படியை 4% அதிகரித்து 46% -மாக உயர்த்தியது.
இந்நிலையில், உத்திரப் பிரதேசமும் தங்களது அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலின் படி, 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் ஊழியர்களும், அரசாங்கத்துடன் தொடர்புடைய 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பானது, தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.