
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட சில மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன் காரணமாக தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என அரசு ஊழியர்கள் சங்கம் எதிர்பார்த்து காத்து இருந்தனர். இதற்கேற்ப ஏப்ரல் 1ம் தேதி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 17) அறிவித்தார். இனி வரும் காலங்களில் மத்திய அரசுக்கு நிகராக அகவிலைப்படி வழங்க திட்டமிடப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தட்கல் முன்பதிவில் ரயில்வேத்துறை திட்டமிட்டே சதி செய்கிறது?? வெளியான பகீர் தகவல்!!!
இந்நிலையில் அகவிலைப்படி உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் எவ்வளவு இருக்கும்? என்பதை அட்டவணையாக வெளியிட்டுள்ளனர். இதில் ஏற்கனவே பெற்று வரும் ஊதியத்துடன் குறைந்தபட்சம் ரூ.742 லிருந்து ரூ.7,531 வரை கூடுதலாக பெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.