சிலிண்டர் பயனர்களுக்கு ஷாக் – மொத்த சலுகையும் ரத்து! இனி முழு தொகையும் செலுத்த வேண்டியது தான்!!

0
இல்லத்தரசிகள் கவனத்திற்கு.., சிலிண்டர் விலையில் இப்படி ஒரு மாற்றமா?? வெளியான விலை பட்டியல்!!!
இல்லத்தரசிகள் கவனத்திற்கு.., சிலிண்டர் விலையில் இப்படி ஒரு மாற்றமா?? வெளியான விலை பட்டியல்!!!

நாடு முழுவதும் சிலிண்டர்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தள்ளுபடி தொகை அனைத்தும், ரத்து செய்யப்படுவதாக முன்னணி நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

அதிரடி அறிவிப்பு:

சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு எரிபொருள் மற்றும் கேஸ் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்து மாநில அரசுக்கு விநியோகம் செய்து வருகிறது. அந்த வகையில், அனைத்து பொது மக்களுக்கும் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு உஜ்வாலா என்ற திட்டத்தை தொடங்கியது. கடந்த சமீப நாட்களாக சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகையும் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஷாக் நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை பெற பயனர்களுக்கு ரூபாய் 200 முதல் 300 வரை பொதுத்துறை நிறுவனங்கள் தள்ளுபடி விலையை வழங்கி வந்தது. சமீப காலமாக இதில் முறைகேடு நடப்பதாக புகார் இருந்ததால் ஐஓசி, எச்பிசிஎல், பிபிசிஎல் ஆகிய மூன்று நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி தொகையை ரத்து செய்வதாக அறிவித்தது.

ஜல்லிக்கட்டுக்கு தடை? உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்ட பீட்டா! ஸ்டாலின் அவசர ஆலோசனை!!

கடந்த 8ம் தேதியே இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளதால், இனி இந்த சிலிண்டரை வாங்க பொதுமக்கள் அதிக விலை கொடுக்க நேரிடும். சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வரும் இந்த சமயத்தில், இது போன்ற அறிவிப்பு பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here