கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 84.50 குறைப்பு…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 84.50 குறைப்பு..., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 84.50 குறைப்பு..., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்தியாவின் வர்த்தக நிலையை பொறுத்து தான் தங்கம், பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலையில், அடிக்கடி மாற்றம் நிகழ்ந்து கொண்டே வருகிறது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மக்களின் அடிப்படைத் தேவையான கேஸ் சிலிண்டரின் (சமையல் எரிவாயு) விலையானது, மாதந்தோறும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த கேஸ் சிலிண்டரின் விலையானது, வணிக நிறுவன பயன்பாடு மற்றும் வீடுகளின் பயன்பாட்டுக்கு என இரண்டு வகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், கடந்த மே மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.171 குறைந்து ரூ.2,024க்கு விற்பனைக்கும் எனவும், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1,118.50ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

அரசு பேருந்துகளில் இனி இந்த வசதியும் உண்டு.., போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!!

இன்று ஜூன் 1ம் தேதி என்பதால், இந்த கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ரூ.84.50 குறைந்து ரூ.1,937-க்கு விற்பனையாக உள்ளது. ஆனால், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.1,118.50க்கு விற்பனையாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here