சிலிண்டர் விநியோகம் செய்வதில் காலதாமதம்.., பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியன் ஆயில் நிறுவனம்!!!

0
சிலிண்டர் விநியோகம் செய்வதில் காலதாமதம்.., பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியன் ஆயில் நிறுவனம்!!!
சிலிண்டர் விநியோகம் செய்வதில் காலதாமதம்.., பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியன் ஆயில் நிறுவனம்!!!

சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆயில் நிறுவனம்

சமீபகாலமாக கச்சா எண்ணெய்களின் விலை ஏற்றத்தால் தொடர்ந்து சிலிண்டரின் விலை மாறுபட்டுக் கொண்டே இருந்தது. இந்நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோருக்கு விநியோகம் செய்ய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாமதம் ஏற்பட்டு கொண்டே வந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால் இதை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தனர்.தற்போது இதற்கு விளக்கமளித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய செங்கல்பட்டு, சேலம், திருச்சி, மயிலாடுதுறை, மன்னார்குடி மற்றும் ஈரோடு ஆகிய பாட்லிங் ஆலைகளில் இருந்து தினசரி 124 லோடு கூடுதல் சிலிண்டர்கள் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(11.05.2023) – முழு விவரம் உள்ளே!!

இது தவிர புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தினசரி 100 லோடு கூடுதல் சிலிண்டர்கள் கொண்டு வரப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் நுகர்வோருக்கு சரியான நேரத்தில் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here