அரபிக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்-தே புயலாக வலுவடைந்தது – பொதுமக்கள் பீதி!!!

0
அரபிக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்-தே புயலாக வலுவடைந்தது - பொதுமக்கள் பீதி!!!
அரபிக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்-தே புயலாக வலுவடைந்தது - பொதுமக்கள் பீதி!!!

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது டவ்தே புயலாக வலுவடைந்து உள்ளதாகவும் மேலும் இந்த புயல் மே 18 ஆம் தேதி காலைக்குள் குஜராத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்று பாதிப்பால் பலி

மே 12 அன்று அரபிக் கடலில் குறைந்த காற்றழுத் ததாழ்வு மண்டலம் உருவாகியது. இது அடுத்த 5 நாட்களில் புயலாக தீவிரமடையக்கூடும்  என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஒரு முன்னறிவிப்பை வெளியிட்டது. மேலும் இந்த புயலுக்கு தாக்டே என பெயரிடப்பட்டது. அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக தீவிரமடைந்து தற்போது வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது.வேகமாக தீவிரமடைந்து வரும் இந்த புயலால் இலட்சத்தீவு, கேரளா, தமிழ்நாடு, கடலோர கர்நாடகா மற்றும்  கோவா பகுதிகளில் மிதமான முதல்  தீவிர மழை பெய்யும் எனவும், குறிப்பாக மே 17 ஆம் தேதி மிக  அதிக கன மழை பெய்யும் எனவும்

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இந்திய வானிலை ஆய்வு  மையம்  தெரிவித்துள்ளது.இந்த புயல் ஓமன் கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று சில வானிலையாளர்கள் கூறுகிறார்கள். சிலர் தெற்கு பாகிஸ்தானில் கரையை கடக்கும் என்கிறார்கள். அப்படி கரையை கடந்தால், குஜராத்தின் சில பகுதிகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது, என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் புயல்களுக்கான பொறுப்பாளர் சுனிதா தேவி தெரிவித்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here