தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் தற்போது வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று இன்னும் வலுப்பெற்று மிதிலி புயலாக உருவாக கூடும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த புயல் வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடப்பதால் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த புயல் காரணமாக தமிழக கடலோரம், மன்னர் வளைகுடா, மத்திய வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.