கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது புகார்., சைபர் கிரைம் வழக்கு., வெளியான முழு அப்டேட்!!

0
கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது புகார்., சைபர் கிரைம் வழக்கு., வெளியான முழு அப்டேட்!!
கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றியவர் தான் ஷர்மிளா. இளம் வயதில் இவரது துணிச்சலான மற்றும் அசத்தலான திறமையை பலரும் பாராட்டி வந்தனர். மேலும் இவரை  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து வாழ்த்தி இருந்தார். திடீரென கனிமொழி  சர்மிளாவை அவரது பணி நேரத்தில் சென்று சந்தித்ததால் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் தனியார்  பேருந்தின் உரிமையாளருக்கும்  ஷர்மிளாவுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. இதனால் தனது வேலையை இழந்த ஷர்மிளாவிற்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கார் பரிசளித்தார்.
இப்படியான சூழ்நிலையில் சர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் புகார் அளித்துள்ளனர்.  அதாவது கோவை  சங்கனூர் சந்திப்பில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணி நேரத்தில் வாகன ஓட்டிகளை அவதூறான வார்த்தைகளில் பேசுவதாக கூறி, அவர் மீது ஆக்சன் எடுக்கும்படியும்  வீடியோவில் பேசி வெளியிட்டிருந்தார். இதனால் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி, ஷர்மிளா சமூக வலைதளத்தில் தன்னை பற்றி தவறான தகவல்களை பதிவிட்டதாக கூறி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here