குக் வித் கோமாளி புகழுக்கு இவ்ளோ அழகான தங்கை இருக்காரா?? வெளியான புகைப்படம்!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி என்றாலே முதலில் நியாபகம்  வரும் பெயர் புகழ் தான். அந்த அளவிற்கு அவரின் நகைச்சுவை இருக்கும். தற்போது அவர் தனது தங்கை மற்றும் அண்ணன் உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் வைரல் ஆகியும்  வருகிறது.

புகழ், இந்த அளவிற்கு புகழ் அடைய அவர் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாதவை. விஜய் டீவிக்கு வருவதற்கு முன்பு கூலி தொழில் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் புகழ். அதன் பிறகு “கலக்க போவது யாரு சீசன் -6”  கலந்து கொண்டார். ஆனார் அவர் அதில் தேர்வாகவில்லை. பின்னர் பல பாதைகளை கடந்து பெண் வேடமிட்டு பெண் குரலில் பேசி தன் முத்திரையை பதித்தார். அதன் பின் அவருக்கு கிடைத்தது தான் இந்த “குக் வித் கோமாளி” சமையல் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு புகழின் பங்கு மிகவும் இன்றியமையாதது. அங்குள்ள அனைவரிடமும் அவர் செய்யும் நகைச்சுவை, ஷிவாங்கி உடன் உள்ள அண்ணன் தங்கை பாசம், ரம்யா பாண்டியன், பவித்ரா, தர்ஷா ஆகியோரோடு அவர் செய்யும் காதல் லீலைகள்,பாலா,சரத் இவர்களுடன் புகழ் அடிக்கும் லூட்டி என சொல்லி கொண்டே போகலாம். தற்போது அவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படமானது  சிறுவயதில் புகழ் ,அவரின் அண்ணன் மற்றும் தங்கையுடன் எடுத்த புகைப்படம் போல தற்போது எடுத்து இரண்டையும் சேர்த்து வைத்துள்ளனர். தற்போது அது வைரல் புகைப்படமாக மாறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here