தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குக் வித் கோமாளி கனி.. ரசிகர்கள் வாழ்த்து!!!

0

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் கனி. இவர் தன்னுடைய மகளின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டி உள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார்.

விஜய் டிவியின் டாப் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலமடைந்து உள்ளனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் கனி. இவர் கடந்த சீசன் 2வில் தன்னுடைய முழு சமையல் திறமையையும் வெளிப்படுத்தி டைட்டில் வின்னர் ஆனார். மேலும் இவர் அந்த நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் ஆழமாக பதிந்தார்.

அங்கு இவர் கோமாளிகளை மிகவும் திறமையாக கையாண்டு, ஒவ்வொரு சவால்களிலும் திறன்பட செயலாற்றினார். மேலும் இவர் திரைத்துறை பின்னணி கொண்டவராவார். அதாவது இவர் பிரபல இயக்குனர் அகத்தியன் அவர்களின் மகள் ஆவார். மேலும் இவரின் கணவர் திரு அவர்களும் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய இரண்டாவது மகளின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்நிலையில் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய மகளின் புகைப்படத்தை பகிர்ந்து,அதோடு சேர்ந்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார். மேலும் அவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here