ஹீரோவாக களமிறங்கும் குக் வித் கோமாளி பிரபலம் – டைட்டில் போஸ்டரே இவ்ளோ கொடூரமா இருக்கே!!

0
ஹீரோவாக களமிறங்கும் குக் வித் கோமாளி பிரபலம் - டைட்டில் போஸ்டரே இவ்ளோ கொடூரமா இருக்கே!!

குக் வித் கோமாளி 3யில் போட்டியாளராக களமிறங்கிய நடிகர் சந்தோஷ் பிரதாப், ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் டைட்டில் உடன் தற்போது வெளியாகியுள்ளது.

 டைட்டில் வெளியீடு:

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகனாக திகழ்பவர் நடிகர்  சந்தோஷ் பிரதாப். கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து தாயம், தேவ், ஓ மை கடவுளே  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

சார்பட்டா பரம்பரை  படத்தில் நடித்த இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்டு பைனல்ஸ் வரை சென்றார். தற்போது இவர் பிரேம் குமார்  என்பவரது இயக்கத்தில் உருவாக உள்ள  க்ரைம் டைம் படத்தில் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

எஸ் என் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு டியர் டெத் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த  போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here