பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த., மாடு முட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

0
பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த., மாடு முட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த., மாடு முட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக ஆரம்பமானது. இந்த மஞ்சு விரட்டு போட்டி 100 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் 1000 கணக்கான காளைகளுடன் தொடங்கியது.

சங்கீதா எப்பவும் இப்படி தான்.., இந்த விசயத்துல கரெக்ட்டா இருப்பா?? உண்மையை உடைத்த விஜய் அம்மா!!

மேலும் இப்போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்க காசு முதல் சொகுசு கார் வரை பரிசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போட்டி ஆரவாரத்துடன் தொடங்கிய நிலையில் காளைகளை அடக்குவதில் மாடு பிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

அந்த வகையில் 9 க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கி 3 ஆம் இடத்தில் அரவிந்த என்ற பாலமேட்டை சேர்ந்த மாடு பிடி வீரர் இருந்து வந்தார். இந்நிலையில் இவரின் வயிற்றில் மாடு குத்தி குடல் சரிந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here