தமிழகத்தில் 19 மாவட்டங்களில் ஊரடங்கு?? கொரோனா நோய்த்தொற்று எதிரொலி!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களகாவே கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மிக கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முக்கிய 19 மாவட்டங்களில் ஊரடங்கு விதிப்பது குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஊரடங்கு

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனாவின் முதல் அலையை விட தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்ளின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றினை தமிழகத்தில் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10ம் தேதி முதல் புதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருந்தும் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தொடர் உச்சத்தை அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தற்போது தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக 20 லட்ச தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

நகைச்சுவை நடிகர் விவேக் மறைவு – அரசியல் தலைவர்கள், திரை உலகினர் இரங்கல்!!

இதனை தமிழக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் போல் தற்போது விதிக்கப்படாது. எந்த பகுதியில் அதிகமாக காணப்படுகிறதோ அங்கு மட்டுமே அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது 19 மாவட்டங்களில் மிக அதிகமாக கொரோனா கண்டறியப்பட்டு வருகிறது.

இதனை தடுப்பதற்கு முழு அளவில் ஊரடங்கு இல்லாமல் சிறிதளவு விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அங்கு கட்டுப்பட்டு நடவடிவகைகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளதாகவும், வர்த்தகம், தொழில்துறை போன்றவற்றை பாதிக்காதவாறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பது குறித்தும் விதித்துள்ளனர். இதன் இறுதி முடிவு இன்று எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here