தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள்…எவற்றுக்கெல்லாம் இ-பாஸ் உடன் அனுமதி !!!

0

தமிழக அரசு மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்நிலையில் இ-பாஸ் உடன் சிலவற்றிற்கு அனுமதி அளித்து உள்ளது. மேலும்  வருகிற 14-ஆம் தேதி  வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

கொடைக்கானல் ,ஏற்காடு,ஏலகிரி,குற்றாலம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு அவசரப் பயணத்திற்கு மட்டும் அந்த அந்த மாவட்ட ஆட்சியாளர்களிடம் இ -பாஸ் அனுமதி பெற்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர்கிறது. அதேபோல் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 5 மணி முதல் மாலை வரை செயல்பட அனுமதி அளித்து உள்ளது. நடமாடும் வாகனங்கள் மூலமும் விற்பனையை தொடரலாம் என தெரிவித்து உள்ளது.

தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களின் ஏற்றுமதி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உடன் 10 சதவீத பணியாளர்களை கொண்டு செயல் பட அனுமதி அளித்து உள்ளது. நடந்து செல்லும் தூரத்தில் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்லுமாறும்,இரு சக்கர மற்றும் நான்கு சக்கர  வாகனங்களில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here