தமிழகத்தில் நாளை முதல் தீவிரமாகும் ஊரடங்கு !!! – இ – பாஸ் கட்டாயம் மற்றும் 10 மணி வரை மட்டுமே கடைகள்

0
தமிழகத்தில் நாளை முதல் தீவிரமாகும் ஊரடங்கு !!! - இ - பாஸ் கட்டாயம் மற்றும் 10 மணி வரை மட்டுமே கடைகள்
தமிழகத்தில் நாளை முதல் தீவிரமாகும் ஊரடங்கு !!! - இ - பாஸ் கட்டாயம் மற்றும் 10 மணி வரை மட்டுமே கடைகள்

தமிழகத்தில் நாளை முதல் தீவிரமாகும் ஊரடங்கு !!! – இ – பாஸ் கட்டாயம் மற்றும் 10 மணி வரை மட்டுமே கடைகள்

நாளை முதல் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் தீவிரமாக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் கொரோனா தொற்று பரவலில் சிக்கி திண்டாடி கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்காமல் சிலர் வெளியே சுற்றி வருவதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், நேற்று நடந்த சட்ட பேரவை ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இ – பாஸ் கட்டாயம் மற்றும் 10 மணி வரை மட்டுமே கடைகள்

இந்த நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது காய்கறி , மளிகை, இறைச்சி கடைகள் மட்டுமே நாளை முதல் செயல்படும். மேலும் காய்கறி, பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நாளை முதல் இயங்க அனுமதி கிடையாது. டீ கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி காய்கறி , மளிகை, இறைச்சி கடைகள் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மின் வணிக நிறுவனங்கள் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

ஆன்லைன் மூலமாக மளிகை பொருட்கள் காய்கறி வாங்கவும் 10 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆங்கில மற்றும் நாடு மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்படும். மேலும் இனி மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தாலும் இ பதிவு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.https://eregister. tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்த பிறகே உள்ளூர் மற்றும் வெளியூரில் பயணிக்க முடியும். இ பதிவு மே 17 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும். ஏற்கனவே அறிவித்தவாறு ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு மே 16 மற்றும் 23 அன்று அமல்படுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here