கொரோனாவின் 2வது அலையால் ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது – ஆஸ்திரேலியா!!!

0
கொரோனாவின் 2வது அலையால் ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது - ஆஸ்திரேலியா!!!
கொரோனாவின் 2வது அலையால் ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது - ஆஸ்திரேலியா!!!

ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கோவிட் வைரஸால் நேற்று ஒரே நாளில் 1,305 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டில் ஊரடங்கானது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்டா வகை கோவிட் வைரஸ் :

சீன நாட்டிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரசானது உலகமுழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கி உலக நாடுகள் அனைத்தும் தவித்து வந்த நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவந்து அனைத்து நாடுகளும் மீள தொடங்கின. மீண்டுவந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. தற்போது ஆஸ்திரேலியாவானது கொரோனா பெருந்தொற்றின் 2வது அலையில் சிக்கி தவித்து வருகிறது. கடந்த பல மாதங்களில் , ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில், ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துகொண்டே வருகிறது.

டெல்டா வகை கோவிட் வைரஸ் :
டெல்டா வகை கோவிட் வைரஸ் :

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான மெல்போர்னில் ஏற்கனவே தொடர்ந்து 4 வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் டெல்டா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைப்பற்றி விக்டோரிய மாகாணத்தின் பிரதமர் டான் ஆண்ட்ரூஸ் குறிப்பிடுவதாவது, “ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக கோவிட் வைரஸ் பாதிப்பு 1,305 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதன் மொத்த பாதிப்பானது 50 ஆயிரத்தைக் கடந்ததுள்ளது. இதனால் ஊரடங்கை திரும்பப் பெற முடியாத நிலையில் மெல்போர்ன் நகர் தொடர்ந்து கோவிட் வைரஸின் 2வது அலையான டெல்டா வகையின் பாதிப்பிற்கு ஆளாகி அதில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துகொண்டே வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here