“அவ்ளோ வெறி ரசிகர்களுக்கு”…, ஐந்தே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த CSK vs MI -போட்டிக்கான டிக்கெட்டுகள்!!

0
"அவ்ளோ வெறி ரசிகர்களுக்கு"..., ஐந்தே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த CSK vs MI -போட்டிக்கான டிக்கெட்டுகள்!!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக CSK மோத உள்ள போட்டிக்கான டிக்கெட்டுகள் ஐந்தே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் பங்குபெற்றுள்ள 10 அணிகளும், தற்போது லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதில், ஒவ்வொரு அணியும், 7 போட்டிகளை சொந்த மண்ணிலும், மீதமுள்ள 7 போட்டிகளை எதிரணியின் மண்ணிலும் என மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றனர். இந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, சேப்பாக்கத்தில் மட்டும் 4 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மீதமுள்ள 3 போட்டிகள் முறையை, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மே 6 ஆம் தேதியும், டெல்லி அணிக்கு எதிராக மே 10ம் தேதியும், மே 14ம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதில், மே 6ம் தேதி நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மற்றும் கவுண்டரில் இன்று காலை தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

WTC 2023: ஐபிஎல் உள்ள இந்திய வீரர்களுக்கு தொடரும் காயங்கள்…, பிசிசிஐ எடுக்க போகும் அதிரடி முடிவு!!

இதையடுத்து, முதலில் ஆன்லைனில் PAYTM மற்றும் www.insider.in தொடங்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் 5 நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, லக்னோவில் உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி LSG அணியை எதிர்த்து போட்டியிட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here