4 ஆண்டுகள் தோல்விக்கு சொந்த மண்ணில் CSK முற்றுப்புள்ளி வைக்குமா?? மும்பை இந்தியன்ஸ் எதிராக இன்று மாபெரும் யுத்தம்!!

0

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது சொந்த மண்ணில் பலப்பரீட்சை செய்ய உள்ளது.

CSK vs MI:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இன்று பிளே ஆப்புக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைக்க, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட உள்ளது. இந்த போட்டியானது, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில், மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. இரு அணிகளும், இன்றைய போட்டிக்கான வெற்றி என்பது மிக முக்கியம் என்பதால், கடுமையாக போராட்டமாக மாற கூடும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு முன் ஐபிஎல் போட்டியில், இந்த இரு அணிகளும் 37 முறை மோதி உள்ளன. இதில், 16 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், மும்பை இந்தியன்ஸ் அணி 21ம் முறையும் வென்றுள்ளது. மேலும், சென்னையில் நடைபெற்ற 8 போட்டியில், 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே CSK அணி வெற்றி பெற்றுள்ளது.

அசுர பேட்டிங், பவுலிங் பலத்தால் எதிரணியை மிரட்டிய குஜராத்…, IPL- லில் முதல் இடத்தை தக்க வைத்து அபாரம்!!

அடுத்த, வருடங்களில் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியே 6 முறை வென்றுள்ளது. இதனால், இந்த தொடர் தோல்விக்கு தோனியின் CSK முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கடைசியாக 2019ம் ஆண்டு இந்த இரு அணிகளும் சென்னை மைதானத்தில் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here