CSK vs GT: குருவை (தோனி) எதிர்கொள்ளும் சிஷ்யன் (ஹர்திக் பாண்டியா)…, இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார்??

0
CSK vs GT: குருவை (தோனி) எதிர்கொள்ளும் சிஷ்யன் (ஹர்திக் பாண்டியா)..., இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார்??
CSK vs GT: குருவை (தோனி) எதிர்கொள்ளும் சிஷ்யன் (ஹர்திக் பாண்டியா)..., இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார்??

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசனுக்கான முதல் பிளே ஆப் போட்டி இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில், லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. தோனியின் சிஷ்யனான கருதப்படும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, தனது முதல் ஐபிஎல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது, பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இன்றைய போட்டியில், குஜராத் அணி செல்லுமேயானால், தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற அணி என்ற பெருமையை அடையும். இதையே போல, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் வென்றால் 10 வது முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அணியாக வரலாறு படைக்கும். ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியை எதிர்நோக்கி நடைபெறும் இந்த போட்டியில், வெற்றிக்காக குரு (தோனி) CSK – சிஷ்யன் (ஹர்திக் பாண்டியா) GT அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன் குறித்து பின்வருமாறு காணலாம்.

என்னடா பொசுக்குன்னு குடும்பத்தை இழுத்துடீங்க…..,RCB ரசிகர்கள் செய்த காரியம்…,

CSK அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி (சி), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, மகேஷ் தீக்ஷனா.

GT அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

விருத்திமான் சாஹா, சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா(சி), தசுன் ஷனகா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோகித் சர்மா, விஜய் சங்கர், யாஷ் தயாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here