IPL 2023: ஜடேஜாவின் அதிரடியால் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய CSK…, வெற்றிக்கு பிறகு தோனி செய்த செயல் வைரல்!!

0
IPL 2023: ஜடேஜாவின் அதிரடியால் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய CSK..., வெற்றிக்கு பிறகு தோனி செய்த செயல் வைரல்!!
IPL 2023: ஜடேஜாவின் அதிரடியால் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய CSK..., வெற்றிக்கு பிறகு தோனி செய்த செயல் வைரல்!!

இந்தியன் சூப்பர் லீக் 16 வது சீசன் கடந்த மார்ச் மாத இறுதி முதல் 10 அணிகளுடன் தொடங்கப்பட்டது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது. கடந்த மே 28 ம் தேதி நடைபெற இருந்த இந்த இறுதிப் போட்டி மழை காரணமாக ரிசர்வ் டே-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற CSK அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் விளைவால், குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சக மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தனர். இதில், சக 54, சுப்மன் கில் 39 ரன்கள் எடுக்க சாய் சுதர்சன் அடித்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம், 20 ஓவர் முடிவில் GT அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK அணி முதல் ஓவரை எதிர்கொண்ட போது மழை குறுக்கிட்டது.

இதனால், மழை நின்றதும் 15 ஓவரில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலங்கை துரத்திய, CSK அணியில் ருதுராஜ் (26), டெவோன் கான்வே (47), அஜிங்க்யா ரஹானே (27), அம்பதி ராயுடு (19), தோனி (0) என வெளியேற கடைசி 2 பந்தில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதில், ஜடேஜா ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி விளாசி CSK அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஜடேஜா (15*) மற்றும் சிவம் துபே (32*) ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம், 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை CSK அணி தட்டி சென்றது. இந்த வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்த ஜடேஜாவை தோனி தூக்கி தனது சந்தோஷத்தை கொண்டாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here