மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ் – இன்று டெல்லியுடன் பலப்பரீட்சை!!

0

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணி முயற்சிக்க வேண்டும். கடைசி போட்டியில் டு பிளெசிஸைத் தவிர யாருமே சிறப்பாக விளையாடவில்லை. மேலும் இக்கட்டான சூழ்நிலையில் கேப்டன் தோனி 7வது இடத்தில் களமிறங்கியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதல் போட்டியில் அதிரடி காட்டிய அம்பதி ராயுடு இந்த போட்டியில் பங்கேற்பது சந்தேகமே.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மறுபக்கத்தில் டெல்லி அணி முதல் போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இதில் ஆட்ட நாயகன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அணிக்கு ஒரு தூணாக இருக்கிறார். இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணி மீது இம்முறை பல எதிர்பார்ப்புகள் உள்ளதால் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. ஐபிஎல் 2020 அட்டவணையில் சென்னை 5வது இடத்திலும், டெல்லி 4வது இடத்திலும் உள்ளது.

KXIP vs RCB: மெதுவாக பந்துவீசிய பெங்களூரு அணி – கேப்டன் விராட் கோஹ்லிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!!

துபாய் மைதானத்தில் இதுவரை 6 போட்டிகள் நடைபெற்று உள்ளன. அதில் டாஸ் வென்ற அணிகள் அனைத்தும் முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது. இரவில் பனிப்பொழிவு சிறிது அதிகரிக்கும் என்பது இதற்கு ஒரு காரணம் ஆகும். பகல் நேரத்தில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் அது 27 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச 11 அணி:

சென்னை சூப்பர் கிங்ஸ் – ஷேன் வாட்சன், முரளி விஜய், டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி (கேப்டன் & wk), சாம் குர்ரான், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், லுங்கி என்ஜிடி

டெல்லி கேபிடல்ஸ் – ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஷிம்ரான் ஹெட்மியர், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (wk), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் / அமித் மிஸ்ரா, காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, மோஹித் சர்மா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here