
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், CSK மற்றும் லக்னோ (LSG) அணிகள் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
ஐபிஎல்:
ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி டெல்லி அணியை எதிர்த்தும், லக்னோ (LSG) அணி கொல்கத்தா (KKR) அணியை எதிர்த்தும் மோதின. இதில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், CSK யின் ருதுராஜ் (79), கான்வே (87), சிவம் துபே (22), ஜடேஜா (20*) மற்றும் தோனி (5*) என அனைவரும் அதிரடியாக விளையாடி 223 ரன்களை குவித்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த இலக்கை துரத்திய டெல்லி அணி டேவிட் வார்னர் (86) தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஒவரில் 146 ரன்களுக்கு சுருண்டது. இதனால், CSK அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 17 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்து பிளே ஆப் வாய்ப்பையும் உறுதிப்படுத்தியது. இதனை தொடர்ந்து, நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 176 ரன்களை எடுத்திருந்தது.
தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு..,, வானிலை மையம் தகவல்!!
இதையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரின் கடைசி பந்து வரை போராடி 175 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியை தழுவியது. இதனால், லக்னோ அணியும் 17 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதனால், CSK மற்றும் LSG அணிகள் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஏற்கனவே, குஜராத் அணியானது பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.