இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். IPL போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட 2008 ஆம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னாவுக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட ஆதரவைக் கொடுத்தனர். இதற்கிடையில், கடந்த 2 ஆண்டுகளாக பார்ம் அவுட்டில் இருந்த சுரேஷ் ரெய்னாவை IPL அணிகள் எதுவும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில், சுரேஷ் ரெய்னா அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதியன்று அறிவித்தார். அந்த வகையில், ஓய்வு அறிவித்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் சுரேஷ் ரெய்னாவை சென்னைக்கு சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நினைவுகூர்ந்துள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில், ‘சின்ன தல ரெய்னா ஓய்வை நினைவுகூரும் விதமாக ஒரு வால்பேப்பர்’ என்று பதிவிட்டுள்ளது.