இந்த வருசமும் போச்சா??ஆபத்தில் சிஎஸ்கே அணி! மீட்பாரா தல தோனி!!

0

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி சொதப்பிய நிலையில் இந்த வருட பல வீரர்களை ஏலத்தில் எடுத்து அதிரடியான கம்பேக்கை சிஎஸ்கே அணி கொடுக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது இந்த வருடத்திலும் சிஎஸ்கே அணிக்கு புதிய பிரச்சனைகள் எழுந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

இந்தியாவில் புகழ்பெற்ற தொடரான ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேலும் ஐபிஎல் வரலாற்றிலேயே சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு தான் லீக் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தொடரில் சிஎஸ்கே அணி ஏலத்தில் பல சிறந்த வீரர்களை எடுத்து மீண்டும் தல தோனி தலைமையில் தலை சிறந்த அணியாக கம்பேக்கை கொடுக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணியிடம் வீழ்ந்தது. அந்த போட்டியில் சிஎஸ்கே அணி பேட்டிங் மிக சிறப்பாக இருந்தது. ஆனால் பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது.

பொதுவாக மும்பை மைதானம் என்றாலே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக தான் இருக்கும். ஏனெனில் அந்த மைதானம் சிறியது. எனவே பந்துவீச்சாளர்கள் பவுன்சரின் மூலம் தான் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி வருவார்கள். ஆனால் அன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி பந்துவீச்சாளர்கள் ஒருவர் கூட சிறப்பாக பந்துவீசவில்லை. பவுன்சரில் அசத்தக்கூடிய வெளிநாட்டு வீரர்கள் சிஎஸ்கே அணியில் ஒருவர் கூட இல்லை. அணியில் இருந்த ஹேசில்வுட் யாரும் எதிர்பாராத வகையில் தொடரில் இருந்து வெளியேறினார்.

என்னது 100வது வெற்றியா?? வேற லெவல் போங்க! கொல்கத்தா அணியை பாராட்டி ஷாருகான் ட்வீட்!!

மாற்று வீரரை தேர்வு செய்வதில் சிஎஸ்கே அணி தாமதப்படுத்தியது. அதுவே சிஎஸ்கே அணிக்கு பெரும் பாதிப்பாக தற்போது அமைந்துள்ளது. மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட பெஹண்டிராப் இன்னும் மும்பைக்கு வரவில்லை. அதேபோல் மற்றொரு பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி அவரும் இன்னும் மும்பைக்கு வரவில்லை. அவர்கள் இனி மும்பை வந்து தனிமைப்படுத்தப்படுவார்கள். இதன் காரணமாக அடுத்த போட்டியிலும் இவர்கள் இல்லாமல் சிஎஸ்கே அணி விளையாடுவதால் சிஎஸ்கே அணி தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here